யாழ். பல்கலைக்கழகத்தில் ‘ நினைவாயுதம்’ கண்காட்சி!

யாழ். பல்கலைக்கழகத்தில் ‘ நினைவாயுதம்’ கண்காட்சி!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையை நினைவுகூறும் வகையில்  ‘ நினைவாயுதம் என்ற கண்காட்சி யாழ்ப்  பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றது.

யாழ் . பல்கலைக்கழகத்தின்  பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு யாழ், பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன், அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி, மலர் தூபி அஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )