இந்தியா செல்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

இந்தியா செல்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (8) இந்தியா செல்லவுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வது இது நான்காவது சந்தர்ப்பமாகும்.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரில், தி இந்து செய்தித்தாளின் ஐந்தாவது பதிப்பு தொடர்பாக நடைபெறும் விழாவில், சிறப்புரையாற்ற ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கர்நாடக முதலமைச்சர் ஸ்ரீ சித்தராமையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் அரசியல், வணிகம், கல்வி, விளையாட்டு மற்றும் கலைத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )