மகிந்தவுடனிருந்த பிள்ளையானுக்கு இன்று நடப்பது என்.பி.பி.யுடன் இருப்போருக்கு நாளை நடக்கும்

மகிந்தவுடனிருந்த பிள்ளையானுக்கு இன்று நடப்பது என்.பி.பி.யுடன் இருப்போருக்கு நாளை நடக்கும்

இன்று கோமாளிகளின் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. என்.பி.பி.என்றால் தேசிய மக்கள் சக்தி என்று நினைக்கின்றனர் ஆனால் அப்படியல்ல. ”என்” நாங்கள் ”பி” பேசியது எல்லாம் ”பி” பொய். அதாவது நாங்கள் பேசுவது எல்லாம் பச்சை பொய் எனவே அந்த புழுகு மூட்டைகளுக்கு தமிழ் மக்கள் அடிபணியக் கூடாது என்பதுடன் அன்று மகிந்தவோடு இருந்த பிள்ளையானுக்கு இன்று நடப்பது இன்று என். பி.பி. யோடு இருக்கின்ற உங்களுக்கு நாளை நடக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன இணைந்து சைக்கிள் சின்னத்தில் களமிறக்கியுள்ள வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் களுவங்கேணியில் மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவ மேலும் பேசுகையில்,

”என்னடா தம்பி கதைக்கிறான்கள் சந்திவெளியிலை…. எப்படியடா நேற்றைய அடி கதிரவெளியிலை…” என அன்று வடக்கு, கிழக்கில் ஒலித்த பாடல் அப்படி இருந்தது. கிழக்கு. ஜெயந்தன் படையணி வடக்கிற்கு வந்தால் சங்கு சக்கரம் சூழலும். யாழ், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியாவில் அவர்களின் சாதனைகள்ஏராளம். எனவே கிழக்கு மக்கள் வீரர்கள் என வடக்கு மக்களாகிய நாங்கள் பெருமையோடு சொல்வோம். அப்படியான மாவீரர்களை, தளபதிகளை தலைவருக்கு விசுவாசமான தொண்டர்களை கொண்ட மண்ணைப் பார்த்து வியந்திருக்கின்றோம்.

ஆனால் அந்த மண்ணை இடையிலே வந்த புல்லுருவிகளும் பதவிகளுக்கு விலை போனவர்களும் தமிழ் தேசியத்தை அடைவு வைத்தவர்களும் பதவிகளுக்காக மண்ணை கோடி கோடியாக விற்று. அன்று மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்கவுக்கு உங்களுடைய மண்ணையும் மக்களையும் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

பிள்ளையானும் வியாழேந்திரனும் கம்பி எண்ணியும் சிலர் இங்கும் திருந்த வில்லை. அங்கும் திருந்த வில்லை. இன்று மகிந்தவினுடைய மறுபுறமான ஜே.வி.பி யுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றனர். இன்று ஜே.வி.பி க்கு கூஜா தூக்குகின்ற, காவடி எடுக்கின்ற சகோதரர்களுக்கு நாங்கள் அனுதாபத்துடன் சொல்லுகின்றோம் இன்றைக்கு பிள்ளையானுக்கு வியாழேந்திரனுக்கு நடந்து கொண்டிருப்பது நாளைக்கு வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நடக்கபோவது உங்களுக்கும் நடக்கும்.

அன்று மகிந்தவோடு இருந்த பிள்ளையானுக்கு இன்று நடப்பது இன்று என்.பி.பி. யோடு இருக்கின்ற உங்களுக்கு நாளைக்கு நடக்கும். சிந்தியுங்கள். இனத்தை காட்டிக் கொடுக்காதீர்கள். ஏன் என்றால் எமது இனத்தின் வரலாறு இரத்தத்தாலும் மரணங்காளாலும் விதைக்கப்பட்டது. உலக்திலே எந்தவொரு நாட்டினுடைய தலைவர்களும் எந்த வொரு போராளி தலைவரும் தனது குடும்பத்தோடு யுத்தம் நடந்த பூமியிலே இறுதிவரை இருந்த வரலாறு கிடையாது. ஆனால் எங்களுடைய தலைவன் இருந்தான்.

அந்த தலைவனுக்கு ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் அவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மண்ணிலே இருந்தனர். எனவே அந்த மண்ணில் இருந்தவர்கள் தயவு செய்து துரோகம் செய்யாதீர்கள் தமிழனுக்கு என இருந்த யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிசொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு மாவட்டம் எங்கே? இன்ற அம்பாறை பெரும்பான்மை பறிபோய் விட்டது. திருகோணமலை முக்கால் வாசி பறிபோய்விட்டது.

மிஞ்சி இருப்பது மீன்பாடும் தேன் நாடான மட்டக்களப்பு. இதையும் நாங்கள் பறிபோக விடுவோமாக இருந்தால் கிழக்கு ஒட்டு மொத்தமாக பறிபோய்விடும். இது தான் உண்மை. பொய் சொல்லி வெல்வதைவிட உண்மையை சொல்லி தோற்றுப் போகும் கஜேந்திரகுமார் தலைமையில் இருப்பவர்கள் நாங்கள்.

மட்டக்களப்பில் எல்லைக்கிராமமான மாதவனை மயிலத்தமடு கிராமத்தில் 900 ஆயிரம் தமிழ் குடும்பங்களை விரட்டியடித்தனர் எனவே இறுதி வரை இந்த மண்ணுக்காக போராடுவோம். குரல் கொடுப்போம். அதேவேளை இந்த மண்ணை பாதிக்காத அபிவிருத்திக்கு குரல் கொடுப்போம். எங்களுடைய அபிவிருத்தி தமிழ் தேசத்தை வளப்படுத்தும். ஒரு போதும் மணலை கொள்ளையடிக்கவோ இனத்தை காட்டிக் கொடுக்கவோ மாட்டோம் சலுகைகளுக்கு அடிபணிந்து போக மாட்டோம்.

தேங்காய் 250 ரூபாவை தாண்டிவிட்டது என அமைச்சரிடம் கேட்டபோது குரங்குகள் தேங்காயை சாப்பிடுவதாக தெரிவித்தார்.அதேபோல அரிசி விலை ஏறிவிட்டது என கேட்டபோது அதற்கான அமைச்சர் அரிசியை நாய், பூனை சாப்பிடுகின்றது என்கிறார். இவர்கள் நாய்களிலும் குரங்குகளிலும் பழி போடுகின்ற பொறுப்பற்ற அமைச்சர்கள். நாய், குரங்கில் தவறில்லை. இந்த ஆட்சி செய்கின்ற ஜே.வி.பியில் தான் தவறு என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )