போப்பின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை!

போப்பின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை!

போப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 சனிக்கிழமை அந் நாட்டு நேரப்படி காலை 10:00 மணிக்கு (BST 09:00) நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் கலந்துகொள்ளும் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கைத் திட்டமிடுவதற்காக செவ்வாயன்று (22) கார்டினல்கள் வத்திக்கானில் கூடினர்.

இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெறும் ஒரு மாநாட்டிற்கு முன்னதாக இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, இன்று முதல் இறுதி மரியாதை செலுத்தத் தொடங்க அனுமதிக்கப்படும் வகையில் அவரது பூதவுடல் தாங்கிய சவப்பெட்டி செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.https://www.youtube.com/embed/yDEGOwb8axk?feature=oembed

Related

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )