நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ”பெரிய விடயம்”; அரசை எச்சரிக்கின்றது பொதுஜன பெரமுன

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ”பெரிய விடயம்”; அரசை எச்சரிக்கின்றது பொதுஜன பெரமுன

தேசபந்து தென்னக்கோன் மற்றும் இசாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக தேடும் நடவடிக்கைக்கும் அப்பாலான தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பெரிய விடயமொன்று உள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்தி செயற்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமானவே இவ்வாறு எச்சரித்துள்ளார்.அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்பு என்பது ஆழமான விடயம். இசாரா செவ்வந்தி மற்றும் தேசபந்து தென்னக்கோனை கைது செய்வதற்காக தேடும் சம்பவத்திற்கும் அப்பாலான பெரிய விடயமொன்று இதற்குள் உள்ளது. கிழக்கில் இடம்பெறும் விடயமொன்று தொடர்பான பிரச்சினை சமூகத்தில் பேசு பொருளாக உள்ளது.

ஐஎஸ் பயங்கரவாதிகள் இலங்கை மீது நடத்திய தாக்குதலை இலங்கையில் அரசியல் கட்சியொன்று ஆட்சியை பிடிப்பதற்காக செய்த குண்டு தாக்குதல் என்ற கோணத்தில் இருந்தே பார்த்தனர். இப்படியிருக்கையில் பயங்கரவாதிகளுக்கு தமது வேலைகளை இலங்கையில் செய்துகொள்வதற்கு இலகுவாக இருக்கும். பிரச்சினையொன்று நடந்தால் அந்த சம்பவம் தொடர்பில் பார்க்காது அதன்பின்னால் இருந்துகொண்ட வேறு விடயம் தொடர்பிலேயே பேசுகின்றனர்.

எவ்வாறாயினும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சில சவால்கள் ஏற்பட்டு வருகின்றன. இது சமூகத்தில் எவ்வேளையிலும் நடக்கலாம் . இந்நிலையில் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்வைத்த விடயங்கள் தொழில்நுட்ப ரீதியில் தவறாகும். தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி முடித்துவிட்டோம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தி முடிக்கக்கூடிய விடயமல்ல. அடுத்துவரும் நேரமே நிச்சயமற்றது.
இதனால் அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் அரசியல் எதிரிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை குறைத்து இருக்கும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் பாருங்கள். நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இதுவே நடந்தது. தமது கவனத்தை தேவையற்ற விடயத்தின் மீது செலுத்தியதாலேயே இறுதியில் அது தாக்குதல் நடத்தப்படும் நிலைமை வரையில் சென்றது என்பதனை புரிந்துகொள்ளுங்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )