
இலங்கையர்கள் உட்பட 75,000 பேரை ஆஸி. நாடு கடத்துமா?
அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர்கள் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளர்.
அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என பவுலின் ஹான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குடும்ப உறுப்பினர்கள் மாணவர் வீசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்படுவதை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், புலம்பெயர்ந்த சமூகத்தால் அவுஸ்திரேலியர்கள் தங்கள் பல சலுகைகளை இழக்கும் சூழ்நிலை தற்போது இருப்பதாக One Nation கட்சித் தலைவர் பவுலின் ஹான்சன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது
இதன் போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கே திரும்ப அழைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். எனினும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத கடத்தல் கும்பலை அழிக்கும் பணியை இந்தியா- அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும். இருநாடுகளுக்கும் பரஸ்பரமாக பயனளிக்கும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.