
மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்று
மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் சிரேஷ்ட தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளது.
மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை எட்டு மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன.
அதனைத்தொடர்ந்து 10.30இற்கு அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று நண்பகலளவில் இறுதி ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடன் தகனம் nசெய்யப்படவுள்ளது.
1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை. சோ. சேனாதிராஜா உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் பலனின்றிய நிலையில் கடந்த மாதம் 29ஆம் திகதி இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கது.