லெபனானில் குண்டு மழைத் தாக்குதல்; 52 பேர் பலி!

லெபனானில் குண்டு மழைத் தாக்குதல்; 52 பேர் பலி!

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன் 72 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )