சைபர் எதிரியாக இந்தியாவை வகைப்படுத்திய கனடா!

சைபர் எதிரியாக இந்தியாவை வகைப்படுத்திய கனடா!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் அதன் அண்மையை நடவடிக்கையாக இந்தியாவை ஒரு “சைபர் எதிரியாக” வகைப்படுத்தி, இணைய பாதுகாப்பில் உள்ள விரோத நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு இந்திய வெளி விவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கனடா இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே கனடா, அங்குள்ள தமது தூதரக ஊழியர்கள் மீது கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய அதிகாரிகளை கனடா ஒடியோ மற்றும் வீடியோ கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் அச்சுறுத்தப்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )