
தீவிரமடையும் எரிவாயு தட்டுப்பாடு; கொழும்பு பெண்களுக்கு ஏற்பட்ட நிலை!
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் வாழும் மக்கள் எரிவாயு இன்மையால் தமது உணவுத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவதில் பல இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.
அதேவேளை தொடர்மாடி குடியிருப்புக்களில் வாழும் மக்கள் தற்போது குடியிருப்பின் மேல் பகுதியில் விறகுகள் மூலமாக உணவுத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES செய்திகள்