அடுத்த வாரம் இலங்கை மூடப்படும்?

அடுத்த வாரம் இலங்கை மூடப்படும்?

அரசாங்கம் அதிகாரபூர்வமாக தீர்மானம் செய்யாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு மூடப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் நெருக்கடியால் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் என்றும் தெரியவருகிறது.

பொதுப் போக்குவரத்துச் சேவை பஸ்கள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் முன்னெடுக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

மேலும், வைத்தியசாலைகளில் அம்பியூலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை வழமையாகப் பேணுவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )