
16 ஈழத்தமிழர்கள் திருச்சி மத்திய சிறைச்சாலையிலிருந்து விடுதலை
திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமிலிருந்து 16 ஈழத்தமிழர்கள் விடுதலையானதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், சிறைச்சாலைக்கு இன்று வருகைதந்தார்.
சிறைச்சாலை கைதிகளிடம் கலந்துரையாடி, விடுதலைக்குப் பின்னர் வாழ்வினைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலை பெற்றோரிடம் தெரிவித்தார்.
மேலும் சிறைச்சாலை கைதிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து , உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மாநகர பொலிஸ் அதிகாரி கார்த்திகேயன், உடனிருந்தார்.