
சிறுவனுடன் அகதிகளாக தனுஷ்கோடி சென்ற இலங்கைத் தமிழர்கள்
வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.
நேற்றிரவு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த டோமினிக் (42), அவரது மனைவி சுதர்சனி(24) அவரது ஆறு வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த மகேந்திரன் (50) உள்ளிட்ட 4 பேரே ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று காலை சுமார் 5 மணி அளவில் தனுஸ்கோடியை அடுத்த நான்காம் மணல் திட்டில் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே அவர்கள் அங்கு வந்துள்ளதாக இராமேஸ்வரம் கடலோர காவல்துறையினர் கூறுகின்றனர்.
இவ்வாறு சென்ற 4 இலங்கை தமிழர்களையும் மீட்ட கடலோர காவல்துறையினர், இராமேஸ்வரம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.