சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை; தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை; தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்களால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது என தான் நம்புவதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நான் பெரிசாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் எனக்கு தற்போது பிரமுகர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த (MSD) இருவரை பாதுகாப்புக்கு தந்துள்ளார்கள்.

பொது வேட்பாளராக நான் போட்டியிடுவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ, சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காக அவர்களால் எனக்கு ஆபத்து வரும் என நான் நம்பவில்லை.

அதேவேளை என்னை வேட்பாளரின் இருந்து விலகுமாறு யாரும் என்னிடம் நேரில் கேட்கவில்லை. எனக்கு அந்த விதமான அழுத்தங்களையும் தரவில்லை. நான் போட்டியிடுவதால் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதற்காக யாரும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ , அழுத்தம் தரவோ இல்லை என மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )