பொது வேட்பாளரின் தாக்கம் நாடெங்குமே உணரப்படுகிறது

பொது வேட்பாளரின் தாக்கம் நாடெங்குமே உணரப்படுகிறது

சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக பன்சாலைகள் உருவாகும், அனுரகுமார திசாநாயக்கா இணைந்த வடக்கு கிழக்கை துண்டாடியவர் ரணில் எம்மை எப்போதுமே ஏமாற்றுபவர் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

தமிழர்கள் எல்லாரும் ஒன்று பட வேண்டிய தருணம் இது இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் வந்த பிறகு ஜனாதிபதி தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் அவர்களது இடங்களில் பிரசாரம் செய்யாமல் வடக்கு கிழக்கில் தற்போது நிலை கொண்டுள்ளனர். தற்போது பொது வேட்பாளரின் தாக்கம் நாடெங்கும் உணரப்பட்டு வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் அவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை கூறவும் கடந்த கால ஜனாதிபதிகள் எமக்குச் செய்த துரோகத்திற்கு பரிசாகவே நாம் இந்த முறை சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கின்றோம் என்ற செய்தியை கொடுக்க வேண்டி இருக்கின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் நல்லாட்சி காலத்தில் அதிக பன் சாலைகளை நிறுவியவர். சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக பன் சாலைகள் உருவாகும்.

அனுரகுமார திசாநாயக்கா இணைந்த வடக்கு கிழக்கை துண்டாடி அதனைப் பிரிக்க காரணமாக இருந்தவர் அனுரகுமார. ரணில் எம்மை எப்போதுமே ஏமாற்றுபவர் என்பதை இந்த அரசியல்வாதிகளின் நோக்கங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )