அநுரவின் ராசிபடி அவரே வெல்வார்: இலங்கையின் புகழ்பெற்ற ஜோதிடர் ரொஷான் சானக திசேரா ஆருடம்

அநுரவின் ராசிபடி அவரே வெல்வார்: இலங்கையின் புகழ்பெற்ற ஜோதிடர் ரொஷான் சானக திசேரா ஆருடம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரால் வெற்றிபெற முடியாது என பாரம்பரிய மற்றம் இலங்கையின் புகழ்பெற்ற ஜோதிடரான ரொஷான் சானக திசேரா தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த செவ்விலே அவர் இதனை கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் ஜாதகப்படி, அவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதளவேனும் இல்லை எனவும் அவரது ராசியில் சந்திரன் உச்ச நிலையில் இருப்பதால் கொஞ்சம் கஸ்டம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் மிகவும் பலவீனமான ஜாதகம் தன்னிடம் இருப்பதாக ரொஷான் சானக திசேர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கைக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது சாதகமான நாளாக அமையாது என ரொஷான் சானக திசேர தெரிவித்துள்ளார்.

அதன்படி அன்றைய தினம் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வது பொருத்தமற்றது என ரொஷான் சானக்க தெரிவித்தார்.

இந்நாட்களில் இரத்தக்களரியை எதிர்பார்க்கலாம் எனவும், அதன் காரணமாக ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது ஜாதகத்தின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஜனநாயக ரீதியாக வரமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாசவுக்கு இரண்டு ஜாதகங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

அதில் ஒன்று மிதுன ராசியின்படியும், மற்றைய ஜாதகம் ரிஷப ராசியின்படியும் தயாரிக்கப்பட்டதாக அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இரண்டு ஜாதகங்கள் இருப்பதாக ரொஷான் சானக திசேரா வெளிப்படுத்தினார்.

அதன்படி விருச்சிகம், தனுசு ராசிகளை வைத்து ஜாதகம் தயாரிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

அனுரகுமார திஸாநாயக்கவின் பிறந்த நேரத்தின்படி, அவர் தனுசு ராசியாக இருந்தால் இந்த தேர்தலில் தோல்வியடைவார் என இந்திக்க தோட்டவத்த குறிப்பிடுகின்றார்.

அவரது லக்னம் விருச்சிகமாக இருந்தால் பெரும் பரிவர்த்தனை யோகம் இருப்பதாகவும், இதுபோன்ற யோகம் உள்ள ஜாதகம் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்களுக்குக் கிடைத்த ஜாதகங்கள் சரியாக இருந்தால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருவர் ரிஷப ராசியில் பிறந்த சஜித் பிரேமதாச மற்றும் விருச்சிக ராசியில் பிறந்த அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவருமே பிரதான போட்டியாளர்கள் என கலந்துரையாடலில் தெரிவித்தனர்.

ஆனால், இவர்கள் இருவரின் ஜாதகத்திலும் சில தோஷங்கள் உள்ளன. சஜித் பிரேமதாசவின் தரப்பு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தன்னிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றதாகவும் ரொஷான் சானக திசேரா வெளிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாச அந்த அறிவுறுத்தல்களை பின்பற்றினார்களா என்பதை இம்மாதம் 12ஆம் திகதிக்குள் அறிந்துகொள்ள முடியும்.

அந்த பரிகாரங்களை செய்யாவிட்டால் அநுரகுமார திஸாநாயக்க இந்த ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என இந்திக்க தோட்டவத்த தெரிவித்தார்.

எனினும், அனுரகுமார திஸாநாயக்கவின் ஜாதகத்தில் சில பிழைகள் காணப்படுவதாகவும் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )