
கை ,கால்களை அடித்து முறிக்கும் இராணுவம்; சபையில் சிறீதரன் எம்.பி சீற்றம்
நாட்டு மக்கள் நாள் கணக்கில் வரிசையில் நின்று அல்லல் படுகின்றனர்.இந்த நிலையிலும் இராணுவத்தினர் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது என இன்றைய சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்
கடந்த 18 ஆம் திகதி விசுமடு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கே இடம்பெற்ற வாய்த் தர்க்கத்தை பயன்படுத்தி 4 பேரை அடித்து கை கால்களை அடித்து முறித்துள்ளனர்.இது தவிர மேலும் பல வன்முறைச் சம்பவங்களால் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.தமிழ் மக்களை மேலும் மேலும் துன்புறுத்த வேண்டாம் என்றார்.