இன அழிப்பின் சிந்தனையே குருந்துார் மலையில் புத்தபகவான்

இன அழிப்பின் சிந்தனையே குருந்துார் மலையில் புத்தபகவான்

இன அழிப்பின் சிந்தனையாகவே குருந்துார் மலையில் புத்தபகவான் சிலையை நிறுவும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்று காட்டி, அங்கு சிங்களவர்களை குடியேற்றும் முயற்சியாகவே இது மேற்கொள்ளப்படுவதாகவும் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில்
குறிப்பிட்டார்.

இதேவேளை கோட்டாகோகம போராட்டக்காரர்களின் கவனத்துக்கு ஏன், இன்னும்
இந்த குருந்துார் மலை விடயம் வரவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் விஸ்வமடுவில் மனநலம் குன்றிய ஒருவர், படையினரால்
தாக்கப்பட்ட விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )