மூன்று மடங்காக அதிகரிக்கும் தேர்தல் செலவுகள்: அச்சு நடவடிக்கைக்கு மாத்திர்ம 800 மில்லியன் தேவை

மூன்று மடங்காக அதிகரிக்கும் தேர்தல் செலவுகள்: அச்சு நடவடிக்கைக்கு மாத்திர்ம 800 மில்லியன் தேவை

அரசாங்க அச்சகத் திணைக்களம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சீட்டு அச்சிடும் செலவினங்களில் கணிசமான அதிகரிப்பைக் கணித்துள்ளது.

முந்தைய தேர்தல் சுழற்சியுடன் ஒப்பிடுகையில் செலவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சிடுவதற்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தேவையான வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் இந்த கணிசமான உயர்வுக்கு காரணமென அரசாங்க அச்சுப்பொறியியலாளர் கங்கா கல்பானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாக்குச் சீட்டு உற்பத்தி தொடர்பான செலவுகள், தளபாடங்கள் மற்றும் செயட்பாட்டுச் செலவுகள் உட்பட்டவை, குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட அச்சு நடவடிக்கைகளுக்காக 800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தடவை வேட்பாளர்களின் எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் அச்சிடும் செலவை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )