ஜனாதிபதி தேர்தல்: முதற்கட்ட அச்சுப் பணிகள் நிறைவு

ஜனாதிபதி தேர்தல்: முதற்கட்ட அச்சுப் பணிகள் நிறைவு

தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளரை தேர்தல் அதிகாரியாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்து தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சிடும் பணிகளை அரச அச்சகத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக அரசாங்க அச்சகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுத் தேவைகளுக்காக தேர்தல் ஆணையத்திடம் இருந்து நிதியைப் பெற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதன்படி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அடிப்படை அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் பிணைப் பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான ஆவணங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )