ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க புதிய அமைப்பு; மீண்டும் மகிந்த சிந்தனை

ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க புதிய அமைப்பு; மீண்டும் மகிந்த சிந்தனை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறைந்தது நான்கு குழுக்களாக பிரிந்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இளைஞர்கள் தலைமையில் இயங்குவதாகக் காட்ட முயற்சித்து வரும் நிலையில் அதற்கு “மகிந்த சிந்தனையைப் பாதுகாப்பதற்கான தேசிய ஒன்றியம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் அழைப்பாளராக நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான தம்மிக்க சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “இளைஞர்களுக்கு ஓர் நாளை” என்ற அமைப்பின் செயற்பாட்டாளராக செயற்பட்டமை தெரியவந்துள்ளது.

நாமல் ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டு வருவதாகவும், தனது தனிப்பட்ட அரசியல் இலக்குகளை முன்னெடுப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளார் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )