
புதிய கருத்துக்கணிப்பு – டிரம்பை விட கமலா ஹரிஸ் முன்னிலையில்
அமெரிக்க துணைஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகட்சியினர் மத்தியில் வேகமாக தனது ஆதரவை அதிகரித்து வருவதும் தனது புதிய போட்டியாளர் காரணமாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்பதும் ரொய்ட்டரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜூலை 22 முதல் 23ம் திகதிக்குள் ரொய்ட்டர் -இப்சொசின் கருத்துக்கணிப்பில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் கமலாஹரிசிற்கு 44வீத ஆதரவு காணப்படுவதும் டொனால்ட் டிரம்பிற்கு 42 வீத ஆதரவு காணப்படுவதும் தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் மூலம் கமலாஹரிஸ் நிலையான முன்னேற்றத்தை காண்பிப்பது தெரியவந்துள்து.
இதேவேளை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 84 வீதமானவர்கள் ஜோபைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதை வரவேற்றுள்ளனர்.