விமானப்படை ஹெலிகொப்டர்களில் 1,535 தடவைகள் பறந்த மஹிந்தவும் மைத்திரியும்!

விமானப்படை ஹெலிகொப்டர்களில் 1,535 தடவைகள் பறந்த மஹிந்தவும் மைத்திரியும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 மற்றும் 2015 க்குமிடையில் தனது 10 வருட பதவிக் காலத்தில், ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் விமானப்படை ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி 978 உள்ளூர் பயணங்களை மேற்கொண்ட அதேவேளை , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 தடவைகள் இவ்வாறு பயணித்துள்ளதாக இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ‘அத’ பத்திரிகையால் இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முதலில் கோரிய தகவல்களை வழங்க விமானப்படைத் தலைமையகம் தவறியதை அடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிங்கள பத்திரிகையான ‘அத’ செய்த முறைப்பாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில், இந்த விபரங்களைப் பெறுவதற்கான கோரிக்கை 2022 டிசம்பர் 5 ஆம் திகதியன்று விமானப்படைத் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் விமானப் படை இந்தத் தகவலை வெளிப்படுத்தத் தவறியது, பத்திரிகையில் செய்தி வெளியிடுவதற்காக மேலதிக தகவலைப் பெறுவதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தது.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் செய்யப்பட்ட முறையீட்டின்படி, 04.01.2024 அன்று மேல்முறையீட்டு எண். RTIC/Appeal/398/2023 இன் கீழ் ஆணையம் விமானப்படை தலைமையகத்திற்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 11 ஆம் திகதி அன்று, கோரப்பட்ட தகவலின், ஒரு பகுதிக்கு மாத்திரமே விளக்கம் தெரிவித்து தகவல் வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமையின் கீழ் தனது 5 வருட காலப்பகுதியில் 557 தடவைகள் ஹெலிகொப்டரில் பயணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உள்ளூர் விமானங்கள் மூலம் அவர் மொத்தம் 131,277.17 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்துள்ளார்.

ஒப்பீட்டளவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தில் வருடாந்தம் 111 முறை விமானப்படை ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியுள்ளனர். இதே வேளை மகிந்த ராஜபக்ச தனது பதவிக் காலத்தில் வருடாந்தம் 88 முறை ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றது.

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் ஹெலிகொப்டர் பயணத்திற்கு பொது நிதியைப் பயன்படுத்தியுள்ளதாகவும், இதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )