காணாமல் போன சிறுமி மீட்பு; 42 வயதுக் காதலர் கைது

காணாமல் போன சிறுமி மீட்பு; 42 வயதுக் காதலர் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்பிரல் 15ஆம் திகதி காணாமல் போயுள்ளார் இதனையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சோர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்று ஒளிந்திருந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியுடன் தொலைபேசியில் உறவினர்கள் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்த நிலையில் தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு சம்பவதினமான வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த நிலையில் பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டதுடன் அவரை அழைத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )