
பெருமளவு நிதிக்கு என்ன நடந்தது?; கர்தினாலிடம் கேட்கும் மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பேராயர்கள் அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் இதுவரையில் பகிர்ந்தளிக்கப்படாது இருக்கின்றன என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
400 வழக்குகள் எனக்கு எதிராக போடப்பட்டுள்ளன. கர்த்தினால் தலைமையிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நான் ஜனாதிபதியாக இருக்கும் போதே அனைவருக்கும் நஷ்டஈடு கொடுத்தேன்.
கத்தோலிக்க அமைப்புகள், உல நாடுகள், பல்வேறு சர்வதேச அமைப்புகள், பொது அமைப்புகள், வர்த்தகர்கள் போன்றோர் கர்தினாலுக்கு நிதி வழங்கியிருந்தனர். அந்த நிதிக்கு என்ன நடந்தது என்று ஜனாதிபதி கூறினால் நல்லது.
நிதி வழங்கியோர் பட்டியல், நிதி பெற்றவர்கள் பட்டியலை வெளியிடலாம். ஆனால் நான் ஜனாதிபதியாக இருந்த போது நிதி வழங்கியும் என்கு எதிராக வழக்குகளை போட்டுள்ளனர் என்றார்.