மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டது: இராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டது: இராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளது டன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறும் குறித்த சோதனை சாவடியினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்த துடன்,சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த சோதனை சாவடியை அகற்றி தருமாறு நேரடி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த பாலப் பகுதியில் காணப்பட்ட வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அப்பகுதியில் இராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் இராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Oruvan
Oruvan
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )