
‘இந்தியாவில் இரு இரயில்கள் மோதி கோர விபத்து’: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இரயிலுடன் சரக்கு இரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, குறித்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரு இரயில்கள் மோதி கோர விபத்து
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இரயிலுடன் சரக்கு இரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழங்கப்பட்ட சமிக்ஞையில் நிற்காமல் பயணித்த சரக்கு இரயில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் இரயிலில் மோதியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மேலும், இந்த விபத்தில் 30 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்தினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைத்தியர்கள், மீட்பு பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.