இலங்கை-இந்திய தரை வழி இணைப்பின் ஆய்வு பூர்த்தி; மன்னார் ஆயரிடம் தெரிவித்த ஜனாதிபதி

இலங்கை-இந்திய தரை வழி இணைப்பின் ஆய்வு பூர்த்தி; மன்னார் ஆயரிடம் தெரிவித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மன்னார் ஆயர் வண.பிடல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுக் காலை மன்னார் ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தச் செயற்பாடுகளைப் பாராட்டிய மன்னார் ஆயர், மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

மன்னாரில் இருந்து பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது, மீதியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இந்தியாவிற்கு விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அதிகாரத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பை மேலும் விவாதிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரை வழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாகவும், முழுமையான சாத்தியக்கூறு ஆய்வுகள் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மன்னாரை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், உல்லாசப் பயணிகளுக்காக மன்னார் கோட்டையை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,

இந்த செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தின் அனைத்து துறைகளிலும் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும் என குறிப்பிட்டார்.

மன்னார் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மன்னார் ஆயர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார் , முன்னாள் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயரினால் ஜனாதிபதிக்கு மாதா சொரூபம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )