சித்து விளையாட்டு இம்முறை சரிவராது!

சித்து விளையாட்டு இம்முறை சரிவராது!

ரணில் விக்கிரமசிங்கவின் சித்து விளையாட்டு இம்முறை சரிவராது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாலித ரங்கே பண்டாரவின் கருத்தாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது இது ரணில் விக்கிரசிங் அவர்களின் கருத்தாகும் இம்முறை தேர்தலில் தாம் மக்களால் மிரட்டியடிக்கப்படுவேன் என்ற சந்தேகத்தில் இவ்வாறான சித்து விளையாட்டுகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

நாட்டை வாங்குரோத்தாக்கிய ரணில், ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையிலே ஜனாதிபதி தேர்தலுக்கு பயந்து இவ்வாறான கருத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றது என தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )