விகாரை புனரமைப்புக்காக திலீபன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு

விகாரை புனரமைப்புக்காக திலீபன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு

வவுனியாவின் எல்லைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமங்களுக்கு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் அவர்களால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் நந்திமித்திரகம கிராமத்தில் அமைந்துள்ள விகாரைக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அத்துடன், அதற்கு அண்மையில் உள்ள கம்பிலிவெவ சிங்கள குடியேற்றப் பகுதிக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக 19 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு அவரால் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )