புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும்

புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும்

புலம்பெயர் தமிழர்கள் அரசியல்நிகழ்ச்சிநிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காசா நெருக்கடி குறித்து மேற்குலக நாடுகள் அலட்சியமாக உள்ளன என தெரிவித்துள்ள அவர் சர்வதேச ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஐக்கியநாடுகள் சபை எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச சட்டங்களில் தீவிர மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டு;ம் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அலிசப்ரி 1965 ம்ஆண்டின் அறிவிப்பில் எல்லைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதமைக்கு ஏற்ப இருநாடுகளும் காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில் 143 நாடுகள் வாக்களித்துள்ளன என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்கும்இடையில் சகாவாழ்வை வலியுறுத்தியுள்ளதுடன் அடுத்த ஐந்து வருடங்களிற்குள் பாலஸ்தீன அரசாங்கத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.

இரட்டை நிலைப்பாடு மற்றும் பாசாங்குதனத்துடன் தொடரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுகள் நல்லிணக்க முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பிரஜைகளின் மனித உரிமையை மேம்படுத்துவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் அன்புக்குரியவர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ள 6700 பேரின் வேதனையை ஏற்றுக்கொண்டுள்ள அவர் இலங்கையில் நல்லிணக்கத்தி;ற்கு ஏற்ற பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்;ச்சி நிரலை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அலிசப்ரி நாட்டின் வடகிழக்கிற்கான அதிகாரப்பகிர்வு மற்றும் அபிவிருத்தியின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )