இறுதியுத்த துயரங்களை சுமந்து சென்ற ஊர்தியை மறித்த பொலிஸார்: சிறிய குழப்பத்தையடுத்து தொடர்ந்த பயணம்

இறுதியுத்த துயரங்களை சுமந்து சென்ற ஊர்தியை மறித்த பொலிஸார்: சிறிய குழப்பத்தையடுத்து தொடர்ந்த பயணம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி இலங்கை பொலிஸாரால் மறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற போதே பொலிஸாரால் மறிக்கப்பட்டு தேவையற்ற வகையிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி இறுதி யுத்தத்தில் மக்கள்பட்ட துன்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை சுமந்தபடி, ஊர்தி, சென்றுகொண்டிருந்த போது புதுக்குடியிருப்பு பொலிஸார் இடை நடுவில் மறித்து ஊர்தியை சோதனையிட்டதோடு, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஊர்தியை, பொலிஸார் நீண்ட நேரமாக வழிமறித்து சாரதியிடம் உழவு இயந்திரத்தின் ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியதுடன், ஆவணங்களை தொலைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )